வயிற்றுப்போக்குக்கு உடனடி நிவாரணம்!

128
Spread the love

சர்க்கரை, டி.பி., கேன்சர், எய்ட்ஸ் பாதிப்புள்ளவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரை எடுப்பவர்களுக்கும் எதிர்ப்புச் சக்தி குறைந்து இருக்கும். இவர்களை எளிதில் நோய் தாக்கும். எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.

 வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனை செல்ல தாமதமானால் உடலில் இருந்து வெளியேறிய நீருக்கு இணையாக உடனே சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரோ, இளநீரோ குடிக்க வேண்டும்.

 நடு இரவு அல்லது பயண நேரங்களில் திடீர் ஜுரம் வந்தால் பாராசிட்டமால் மாத்திரை ஒன்றை பயன்படுத்தலாம். அதன்பின், 6 மணி நேரத்துக்குள் டாக்டரை சந்திப்பது நல்லது.

வயிற்றுப்போக்கு விடுபட உடனடி நிவாரணம் வெறும் கொய்யா இலைகளை மெல்வதுதான்.

சாப்பிட்டதும் ஏற்படும் நெஞ்செரிச்சல் சரியாக சிறிது வெல்லம் கரைத்த நீரை அருந்த வேண்டும்.

வியர்வை தங்கிய உடையுடேனேயே இருப்பது ஆபத்து. அதுவே நோய் தொற்றுக்கான காரணமாக அமைந்து விடும்.

நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தால் சிறுநீர் மஞ்சளாக போகும்.

உடலில் ஏதேனும் காயம் அல்லது நகக்கீறல் போன்றவை ஏற்பட்டால், 12 மணி நேரத்துக்குள் தடுப்பு ஊசி (டி.டி.) போடவேண்டும். தடுப்பூசி காலத்தில் இருக்கும், பத்து வயது வரையுள்ள குழந்தைகள் என்றால், இந்த ஊசி தேவையில்லை.

 மூலம், பவுத்திரம் பாதிப்பு உள்ளவர்கள் கூச்சப்படாமல் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். மலச்சிக்கல் தொடர்ந்தால், இதயத்துக்கே ஆபத்தாகி விடும்.

LEAVE A REPLY