6,7ல் 11 மாவட்டத்தில் அனல் காற்று வீசுமாம்…

169
Spread the love

பொதுவாக தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் வெயில் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது கடந்த பிப்ரவரி மாதமே வெயில் தாக்கம் அதிகரித்தது. இந்த மாதம் இது மேலும் அதிகரித்துள்ளது.  இந்நிலையில் இன்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: வரும் 6 மற்றும் 7ம் தேதிகளில் தமிழகத்தின் 11 உள்மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி வரை வெப்பம் அதிகரித்து அனல்காற்று வீசும். கரூர் , கோவை ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பூர், தருமபுரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இந்த தாக்கம் இருக்கும். கடலோர மாவட்டங்களில்  2 டிகிரி வெப்பம் அதிகரித்து காணப்படும். அடுத்த ஓரிரு நாட்களில் வெப்ப சலனத்தால் பல இடங்களில் மழை பெய்யும். இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

LEAVE A REPLY