ரிக்‌ஷா தொழிலாளியை ரூ.3.47 கோடி கட்ட சொல்லி ஐ.டி நோட்டீஸ்..

114
Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அமர் காலனியை சேர்ந்தவர்  பிரதாப் சிங்.  ரிக்‌ஷா தொழிலாளியான இவருக்கு வருமானவரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் ஒன்று வந்துள்ளது. அதில் 3 கோடியே, 47 லட்சத்து, 54 ஆயிரத்து, 896 ரூபாய் வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், எனவே உடனடியாக வரியை செலுத்துமாறும் அதில் தொிவிக்கப்பட்டிருந்தது. அதிர்ந்து போன பிரதாப்சிங். இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில்….. கடந்த மார்ச் மாதம் வங்கி கணக்கிற்காக, பான் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவருக்கு வந்த கவரில் பான் கார்டு இல்லாமல் வண்ண நிறத்தில் ஸிராக்ஸ் எடுக்கப்பட்ட பேப்பர் மட்டும் வந்துள்ளது. படிப்பறிவு இல்லாத அவர், இதுதான் பான் கார்டு என்று நினைத்து அதனை வைத்துக்கொண்டு உள்ளார். ஆனால் அவரின் பான் கார்டை பயன்படுத்தி ஜிஎஸ்டி எண் பெற்ற யாரோ ஒருவர், தனது வியாபாரத்தின் மூலம் அதன் மூலம் 43 கோடியே 44 லட்சத்து 36 ஆயிரத்து 201 ரூபாய் அளவிற்கு லாபம் ஈட்டி உள்ளார். அதன் அடிப்படையிலேயே ரிக்‌ஷா தொழிலாளிக்கு நோட்டீஸ் வந்துள்ளது தொிய வந்தது. இந்த விஷயத்தை அறிந்து கொண்ட வருமான வரித்துறையினர் அடையாளம் தொியாத நபர்கள் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யுமாறு போலீசாரை அறிவுறுத்தி உள்ளனர்.

LEAVE A REPLY