Spread the love

வருமான வரி சட்டத்தை மாற்றி அமைக்கவும், வருமான வரி சட்ட பிரிவுகளை எளிமையாக்கவும், வரி வசூலை அதிகரிக்கவும் மத்திய அரசு ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளது. இந்த குழு தற்போது தனது பரிந்துரையை அளித்து உள்ளது.

இதில்  5%, 10%, 20%, 30% மற்றும் 35% என 5 அடுக்கு வரி முறையை பரிந்துரைத்துள்ளது. தற்போது 5%, 20%, 30% என்ற முறை அமலில் உள்ளது. இதன்படி, தற்போது ரூ.2½ லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரூ.2½ லட்சத்துக்கு மேல் ரூ.5 லட்சம் வரை 5%, ரூ.5 லட்சத்துக்கு மேல் ரூ.10 லட்சம் வரை 20%, ரூ.10 லட்சத்துக்கு மேல் 30% வரி விதிக்கப்படுகிறது.

இதை தற்போது  ரூ.2½ லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 5 % என்றும், (இவர்களுக்கு ரூ.12 ஆயிரத்து 500 வரிக்கழிவு கிடைக்கும்) ரூ.5 லட்சத்துக்கு மேல் ரூ.10 லட்சம் வரை 10% ,ரூ.10 லட்சத்துக்கு மேல் ரூ.20 லட்சம் வரை 20 % வரி விதிக்க பரிந்துரைத்துள்ளது.  ரூ.20 லட்சத்துக்கு மேல் ரூ.2 கோடி வரை 30%,  ரூ.2 கோடிக்கு மேல் 35%மும், இவர்களுக்கு சர்சார்ஜை (கூடுதல் வரி) ரத்து செய்து பரிந்துரைத்துள்ளது.

இதன்படி ரூ.5 லட்சத்துக்கு மேல் ரூ.10 லட்சம் வரை 20% வரி செலுத்தி வந்த நிலையில் அது 10% ஆக குறையும். இந்த பரிந்துரை விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY