Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்…டில்லியில் இன்று நடக்கிறது

வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்வதற்காக 28 எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை அமைத்துள்ளனர். இந்தக் கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் பெங்களூருவிலும், 3-வது கூட்டம் கடந்த 1-ம் தேதி மும்பையிலும் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., ராஷ்டிரீய ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்பட 28 எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. இதில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் இறுதி செய்வது என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும், இந்தியா கூட்டணியில் 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவும் இறுதி செய்யப்பட்டது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், பாராளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில், இந்தியா கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் டில்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டில் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தொகுதி பங்கீடு, கூட்டாக பிரசாரம் செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடைபெறலாம் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!