Spread the love
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி  2 டெஸ்ட் 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது. இந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்தூல் தாகூர் காயமடைந்தார். இதனால் அவர் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.  தாக்கூருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் யாதவ் சிறப்பாக பந்து வீசி 10 விக்கெட்டுகள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி வரும் 21 ஆம் தேதி கவுஹாத்தியில் தொடங்கவுள்ளது.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி விவரம்: விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கே.எல். ராகுல், ராயுடு, மணீஷ் பாண்டே, தோனி, ரிஷப் பண்ட், ஜடேஜா, சாஹால், குல்தீப் யாதவ், முகமது சமி, கலீல் அகமது, உமேஷ் யாதவ்.

LEAVE A REPLY