இந்தியாவில் கொரோனா அசுர வேகம்..

70
Spread the love
இந்தியாவில் கொரோனா அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில்  இன்று  கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரே நாளில் 22 ஆயிரத்து 771 பேருக்கு கொரோனா  உறுதியாகியிருக்கிறது. இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 48 ஆயிரத்து 315  ஆக உயர்ந்துள்ளது.  அதேபோல், கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 442 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18,655 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பிலிருந்து  3,94,227 பேர் குணமடைந்துள்ள நிலையில்,  2,35,433 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY