இந்தியாவில் கொரோனா 3ம் அலை இருக்கும்.. எய்ம்ஸ் எச்சரிக்கை..

210
Spread the love

இந்தியாவில் கொரோனா 3ஆம் அலைக்கு வாய்ப்புள்ளது என்று எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் தற்போது பலருக்கும் தடுப்பூசி போட ஆரம்பித்துள்ளனர். இதனால் 3ஆம் அலையின் தாக்கம் தீவிரமாக இருக்காது. இரவு நேரம் அல்லது பகுதி நேர ஊரடங்கால் கொரோனா பரவுவதை தடுக்க முடியாது, குறைந்தது இரண்டு வார காலத்திற்கு தீவிரமான நாடு தழுவிய முழு ஊரடங்கை கொண்டு வந்தால் மட்டுமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும். மருத்துவமனை கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தல், படுவேகமாக நோயாளிகளின் எண்ணிக்கையை குறைத்தல் மற்றும் தீவிர தடுப்பூசி திட்டத்தின் மூலம் மட்டுமே கொரோனா சங்கிலியை உடைக்க முடியும் என ரந்தீப் குலேரியா கூறியுள்ளார்.. 

LEAVE A REPLY