இந்தியாவில் 24 மணி நேரத்தில் 20,903 பேருக்கு கொரோனா…

22
Spread the love

உலகம் முழுவதும் 1 கோடியே 09 லட்சத்து 73 ஆயிரத்து 896 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 5 லட்சத்து 23 ஆயிரத்து 231 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 61 லட்சத்து 34 ஆயிரத்து 789பேர் குணமாகியுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 6,04,641 லிருந்து 6,25,544 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,79,892 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18,213 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது . இந்தியாவில் 24 மணிநேரத்தில் 20,903 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் 379 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

LEAVE A REPLY