இந்தியாவை எதிர்ப்பதா?.. நேபாள பிரதமருக்கு கட்சிக்குள் நெருக்கடி…

64
Spread the love

சமீப காலமாக இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை நேபாள அரசு எடுத்து வருகிறது. இந்திய பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைப்படத்தை தயாரித்த பிரதமர் ஒலி தலைமையிலான அரசு, அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்நிலையில் பிரதமர் பதவியில் இருந்து தம்மை வெளியேற்ற இந்தியா திட்டமிடுவதாக சமீபத்தில் பிரதமர் ஷர்மா ஒலி குற்றம் சாட்டி இருந்தார். எதிரணியினரை ஆட்சியில் அமர வைக்க இந்திய அரசு சதி செய்வதாகவும் ஒலி தெரிவித்து இருந்தார்.

பிரதமர் ஷர்மா ஒலியின் கருத்துக்கு ஆளும் நேபாள கம்பியூனிஸ்ட் கட்சி தலைவர்கள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நேற்று நடைபெற்ற கட்சியின் நிலைக்குழு கூட்டத்தில் பேசிய தலைவர்கள், இந்தியாவுக்கு எதிரான நேபாள பிரதமரின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். உள்நாட்டு பிரச்சனைகளை திசை திருப்ப நட்பு நாடான இந்தியா மீது வீண் பழி சுமத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். பிரதமர் ஷர்மா ஒலி, பதவி விலக வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் தமது கருத்துகளால் பிரதமர் பதவிக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளதை அடுத்து சக அமைச்சர்களை சமாதானம் செய்யும் முயற்சியில், இறங்கி உள்ள ஷர்மா ஒலி, அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். 

LEAVE A REPLY