Spread the love
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று 2வது ஒருநாள்  போட்டி நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித், தவான் அதிரடியால் 25 ஓவர்கள் வரை நியூசி. பவுலர்கள் திணறிப் போயினர். அதுவரை அவர்களால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. ஒரு வழியாக ரோஹித் 87, தவான் 66 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த கோஹ்லி, ராயுடு, தோனி ஆகியோர் தங்கள் பங்குக்கு வெளுத்து கட்டினர். தோனி 48, கோலி 43, ராயுடு 47 ரன்களும் எடுத்தனர். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்  இழப்புக்கு 324 ரன்கள் குவித்தது.
 
 

இதையடுத்து  325 என்ற சவாலான ஸ்கோரை துரத்த தொடங்கிய நியூசி. அணி வீரர்கள் சொதப்பினர். தொடக்க ஆட்டக்காரர்கள் குப்தில் 15, மன்றோ 31 ரன்னுக்கு நடையை கட்டி சரிவை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து களமிறங்கிய வில்லியம்சன் 20,டெய்லர் 22 என ஏமாற்றினர். இதனால் அந்த அணியின் ரன் விகிதம் வெகுவாக குறைந்தது. மற்ற வீரர்களும் பொறுப்பற்ற முறையில் ஆடி விக்கெட்களை பறி கொடுத்தனர். டெய்லண்டர்களில் பிரேஸ்வெல் சற்று அதிரடி காட்டி 57 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேற அந்த அணி 40.2 ஓவரில் 234 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் ஜாதவ் 4, பிரவீண்குமார், சாகல் தலா 2 விக்கெட் எடுத்தனர். ஆட்ட நாயகன் விருது ரோகித்துக்கு கிடைத்தது. இதையடுத்து இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்று முன்னிலை பெற்றது.

 

LEAVE A REPLY