ரோகித் விளாசல்.. இந்தியா அசத்தல் வெற்றி

274

 இந்தியா வங்கதேச அணிகள் இடையே இரண்டாவது டி20 போட்டி இன்று ராஜ்காட்டில் நடைபெற்றது.

முதல் போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றிருந்ததால் இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இருந்தது.

இந்நிலையில் டாஸ் வென்ற கேப்டன் ரோகித் பந்து வீச முடிவு செய்தார். இதையடுத்து வங்கதேசத்தின் லிட்டன் தாஸ் மொகமத் களமிறங்கினர். 29 ரன்னுக்கு லிட்டன் தாஸ், முஹம்மத் 36 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர்.

அதன்பின் சர்க்கார் 30 ,கேப்டன் முகமதுல்லா 30 ரன் எடுத்தனர்  அந்த அணி 18.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் மற்றும் தவான் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இதில் கேப்டன் ரோகித் சர்மா வெளுத்து வாங்கினார்.ரோகித்  43 பந்துகளில் 85 ரன்கள் விளாசி வெளியேறினார். இதில் 6 சிக்சர்கள் 6 பவுண்டரிகள் அடங்கும்.

அதன்பின் தவான் 31 ரன்னில் அவுட்டானார். அதன்பின் களமிறங்கிய கே எல் ராகுல் ஸ்ரேயாஸ் அய்யர் பதட்டமின்றி ஆடினர்.

15.4 ஓவரில் 154 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டினர். இதையடுத்து இரு அணிகளும் 1 -1 என்று சமநிலையில் உள்ளன.மூன்றாவது மற்றும் கடைசி போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

LEAVE A REPLY