இந்திய சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பால் மூச்சு திணறல்….

96
Spread the love

ஹைதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் 12 ஆசிய சிங்கங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவைகளுக்கு மூச்சு திணறல் இருந்ததை தொடர்ந்து அதன் மாதிரிகைகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையின் முடிவில் இன்று சிங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அங்குள்ள 8 சிங்கங்கள் கொரோனாவினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை மத்திய சுற்று சூழல் அமைச்சகம் உறுதி செய்துள்ளது இதனை தொடர்ந்து சிங்கங்களின் உடல்நிலைகளை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்தியாவில் முதல் முறையாக விலங்குகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY