லாரா சாதனையை முறியடிக்கும் இந்திய வீரர்..வார்னர் கணிப்பு

157

பாகிஸ்தானுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஆட்டமிழக்காது 335 ரன்களை குவித்து சாதனை படைத்தார். கடந்த 2004 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவு அணி வீரர் பிரையன் லாரா, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 400 ரன்கள் எடுத்தார்.இதுவே டெஸ்ட் போட்டி வரலாற்றில் தனியாக ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ரன் என்ற சாதனையாக இருக்கிறது.

இந்நிலையில் எதிர்வரும் காலத்தில் லாராவின் சாதனையை எந்த வீரர் முறியடிப்பார்  என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் கூறுகையில்; லாராவின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ள வீரர் ஒருவரின் பெயரை சொல்ல வேண்டும் என்றால், எனது கணிப்பபடி அது இந்திய வீரர் ரோகித் சர்மாவாகத் தான் இருக்கும். நிச்சயம் அவரால் இச்சாதனையை நிகழ்த்த முடியும்’ என்றார்.

மேலும் அவர் கூறியதாவது; டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் விளையாட என்னை அதிகமாக ஊக்குவித்தவர், இந்தியாவின் வீரேந்திர ஷேவாக்தான். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக விளையாடிய போது ஒரு முறை எனது அருகில் அமர்ந்திருந்த ஷேவாக் என்னிடம், ‘20 ஓவர் போட்டி வீரரை காட்டிலும் சிறந்த டெஸ்ட் வீரராக நீங்கள் உருவெடுப்பீர்கள்’ என்று தெரிவித்தார் என்றார். 

LEAVE A REPLY