Spread the love

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.

இந்நிலையில் 2 வது நாளான நேற்று இந்தியாவின் அபிஷேக் வர்மா 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிச் சுற்றில் 244.2 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு இந்திய வீரர் சவுரப் சவுத்ரி 221.9 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றார். துருக்கியின் இஸ்மாயில் கெலஸ் வெள்ளிப் பதக்கம் வென்றார். 50 மீ ரைபிள் 3 ஆம் நிலை பிரிவில் சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதையடுத்து அவர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவும் தகுதி பெற்றார். இதன்மூலம் இந்த உலக கோப்பை போட்டியில் இந்தியா மொத்தம் 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் பதக்க பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். இவர்களில் அபிஷேக் வர்மாவும், சவுரப் சவுத்ரியும் உள்ளனர். 

 
 

 

 

 

LEAVE A REPLY