எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் இஞ்சி சட்னி…

75
Spread the love

தேவையான பொருள்கள்:- இஞ்சி-1/2 கப் கடலை பருப்பு-2 ஸ்பூன் காய்ந்த மிளகாய்-5 கறிவேப்பிலை-சிறிதளவு புளி-தேவையான அளவு வெல்லம்-1ஸ்பூன் எண்ணெய்-தேவையான அளவு உப்பு -தேவையான அளவு கடுகு-சிறிது

செய்முறை:- முதலில் இஞ்சியை தண்ணீரில் நன்கு அலசி சிறு சிறு தூண்டுக்ளாக நறுக்கி கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும்.எண்ணெய் காய்ந்த பிறகு அதில் நறுக்கிய இஞ்சியை சேர்த்து நன்றாக வதக்கவும். இஞ்சியை வதக்கிய பிறகு அதில் கடலை பருப்பு,காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து மீண்டும் வதக்கி விட வேண்டும். பிறகு வதக்கிய பொருளுடன் சிறிதளவு புளி கரைசல்,மற்றும் வெல்லம் சேர்த்து நன்றாக மிக்சியில் அரைக்க வேண்டும். பின்னர்,ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு,கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து தாளித்து அரைத்த சட்னியில் ஊற்ற வேண்டும். 5 நிமிடத்தில் கொரோனாவை விரட்ட இஞ்சி சட்னி தயார்…. 

LEAVE A REPLY