பதவியேற்புக்கு முன்பே ஆய்வு…. திருச்சி திமுக எம்எல்ஏ இனிகோவின் முதல் சர்ச்சை

802
Spread the love

திருச்சி கிழக்கு தொகுதி திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் இன்று திருச்சி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை, படுக்கை வசதி, உணவு வழங்கல், ஆக்சிஜன் கையிருப்பு குறித்து அவர் மருத்துவமனை டீன் வனிதாவிடம் கேட்டறிந்தார். ஆய்வின் முடிவில் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது…. திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 794 படுக்கை வசதிகள் உள்ளன. அதில் 766 படுக்கைகள் நிரம்பியுள்ளது.
நோயாளிகள் எண்ணிக்கையை பொறுத்து படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படும்,
ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகள் 157 உள்ளது. அதை அதிகரிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. மருந்து, மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு இல்லை.
500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 500க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அரசு

மருத்துவமனையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 4000 முதல் 5000 RTPCR சோதனை மேற்கொள்ளப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் தடுப்பூசிகள் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது. ரெம்டெசிவர் மருந்து அரசு சார்பில் விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் உணவில் தரம் இல்லை என நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர். அது குறித்து டீன் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். நோயாளிகளுக்கு எந்தவித குறைவும் ஏற்படாத வகையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம் என்றார். சட்டமன்றம் சென்று எல்எல்ஏ பதவியேற்றுக்கொள்வதற்கு முன்பே திமுக எம்எல்எ ஆய்வு மேற்கொண்டுள்ளது கேள்விக்குறியை ஏற்படுத்தி உள்ளது. 

LEAVE A REPLY