முதல்வர் பாதுகாப்பில் கவனம்..உளவுத்துறை எச்சரிக்கை

208
Spread the love

கோவை மேட்டுப்பாளையம் அருகேயுள்ள நடூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனி உள்ளது. அருகில் இருந்த ஒரு சுற்றுச்சுவர் நேற்று இடிந்து விழுந்து 4 வீடுகள் தரைமட்டமானதில் 17 பேர் பலியாயினர். இந்த சம்பவத்திற்கு காரணமான வீட்டின் உரிமையாளரை கைது செய்ய வேண்டும், உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தாருக்கு தலா 25 லட்சம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சம்மந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் சிவ சுப்பிரமணியன்  இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே இன்று மேட்டுப்பாளையம் செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இறந்தவர்களின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். இந்த விவகாரத்தில் தமிழ் அமைப்புகள் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தி வருவதால் தேவையான  பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனமாக செய்ய உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த் முரளி தலைமையில் மேட்டுப்பாளையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY