ரொம்ப வீக்கா இருக்கீங்க..! சர்வதேச நிதியம் எச்சரிக்கை!

137

சர்வதேச நாணய நிதியத்தின் செய்தித்தொடர்பாளர் ஜெர்ரி ரைஸ் அமெரிக்காவில் இந்திய பொருளாதார நிலை குறித்த அறிக்கை வெளியிட்டு அளித்த பேட்டி; இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் மெதுவான வளர்ச்சியை பிரதிபலிக்கிறது. புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் அண்மைக்கால பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட மிகவும் பலவீனமாக இருப்பது தெரிகிறது. ஏப்ரல் – ஜூன் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவீதமாக குறைந்துள்ளது. இதுவே ஓராண்டுக்கு முன் 8 சதவீதமாக இருந்திருக்கிறது.

உற்பத்தித்துறை வீழ்ச்சியும், விவசாய விளைபொருட்கள் குறைந்ததும் இந்த மந்த நிலைக்கு முக்கியக் காரணம். இதற்கு முன் 2012-13 ஜூன் மாதத்தில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 5 சதவீதத்துக்கும் குறைவாக, 4.9 சதவீதமாக இருந்திருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY