Skip to content
Home » சென்னையை வீழ்த்திய குஜராத்.. சிக்ஸ் அடித்து டோனி சாதனை.

சென்னையை வீழ்த்திய குஜராத்.. சிக்ஸ் அடித்து டோனி சாதனை.

16வது ஐபிஎல் தொடர் அகமதாபாத்தில் நேற்று கோலாகமாக தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 178 ரன்கள் எடுத்தது. 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் 19.2 ஓவரில் 5 விக்கெட் இழந்து 182 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சென்னையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தில் குஜராத் அபார வெற்றிபெற்றது. இப்போட்டியில் சென்னை கேப்டன் டோனி 7 பந்தில் ஒரு சிக்சர் உள்பட 14 ரன்கள் எடுத்தார். டோனி அடித்த அந்த சிக்சர் மூலம் அவர் சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். அந்த சிக்சர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டோனி அடித்த 200வது சிக்சராகும். அதேபோல், ஒரு ஐபிஎல் அணிக்காக அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் டோனி 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஒரு அணிக்காக அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியல் பின்வருமாறு: கிறிஸ் கெயில் – 239 (பெங்களூரு) ஏபி டிவில்லியர்ஸ் – 238 (பெங்களூரு போலார்டு – 223 (மும்பை) விராட் கோலி – 218 (பெங்களூரு) டோனி – 200 (சென்னை) இந்த பட்டியலில் கோலி மற்றும் டோனி மட்டுமே ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றனர். எஞ்சிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!