கொரோனாவிடம் தோற்றது ஐபிஎல்…. இனி போட்டிகள் நடைபெறாது…..

43
Spread the love

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு நாட்டில் நடைபெற்றது. இந்த ஆண்டு சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், டெல்லி, பெங்களுரு ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. முதலில் சென்னை, மும்பையில் ஐபிஎல் நடைபெற்றது. அதன் பின்னர் தற்போது அகமதாபாத், தில்லியில் ஆட்டம் நடைபெற்று வருகின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள், பயிற்சியாளர், டிரைவர் என நான்கு பேருக்கு கொரோனா தொற்று ஏற்படவே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதனால் நேற்றிரவு நடைபெற இருந்த கொல்கத்தா-பெங்களுரு அணி ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. நாளை நடைபெறவிருக்கும் சிஎஸ்கே-ராஜஸ்தான் ஆட்டமும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. சன்ரைடர்ஸ் அணி விக்கெட் கீப்பருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சன்ரைடர்ஸ் அணியினர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதனால் இன்று நடைபெற விருந்த மும்பை- சன்ரைடர்ஸ் ஆட்டமும் ஒத்தி வைக்கப்பட்டது. தில்லி வீரர் ஒருவரும் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளார். கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகளை தொடர்ந்து நடத்தலாமா என்பது குறித்து ஐபிஎல் மற்றும் பிசிசிஐ நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில்…. ஐபிஎல் 2021 போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY