எங்கள் மீது ஒரு குண்டு பாய்ந்தால்…. ட்ரம்ப்புக்கு ஈரான் எச்சரிக்கை

154
Spread the love

ஈரான்- அமெரிக்கா மோதல் அதிகரித்து வருகிறது. ஈரானுக்கு எதிராக கடும் பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. சமீபத்தில் ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டது.   இதற்கிடையே ஈரானின் தெற்கு பகுதியில் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் தெரிவித்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த  டிரம்ப் ஈரான் மிகப் பெரிய தவறு செய்து விட்டது” என்றார். பின்னர் ஈரான் மீது 3 இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு, கடைசி நேரத்தில் கைவிடப்பட்டதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இது பதற்றத்தை அதிகரித்தது. 

இந்நிலையில், ஈரான் நாட்டின் ராணுவ தளபதியின் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் அபோல்பஸல் ஷேகர்ச்சி தெரிவித்துள்ளதாவது: எங்கள் நாட்டின் மீது ஒரு தோட்டா பாய்ந்தால் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளுக்கு சொந்தமான உடைமைகள் தீக்கிரையாகும் என்று எச்சரித்துள்ளார். இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

LEAVE A REPLY