தாலி கட்டிய…. புதுப்பெண்ணை தனிமைப்படுத்தியது கொரோனா

156
Spread the love

சேலம், கெங்கவல்லியை சேர்ந்த இளம்பெண் சென்னையில் பணியாற்றி வருகிறார்.  கடந்த 21ல் ‘இ – பாஸ்’ மூலம் சென்னையிலிருந்து பெண் வந்தார். தலைவாசல் நத்தக்கரை சோதனைச்சாவடியில் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. திருமணத்திற்காக 21ம் தேதி சேலத்திற்கு வந்தார். இதில் அவருக்கு கொரோனா இருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே வரவேண்டாம் என பெண்ணை அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து ஞாயிறு அன்று அந்த பெண்ணுக்கு வீட்டிலேயே எளிய முறையில் திருமணம் நடந்தது. ஒரு சிலரே திருமணத்தில் பங்கேற்றனர். இதற்கிடையே, அந்த பெண்ணுக்கு கொரோனா உறுதியானதாக கூறப்படுகிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரது வீட்டுக்கு சென்று, மணப்பெண்ணை தனிமையில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர். மணமகன் அவரது வீட்டிற்கு திரும்பி சென்றார். திருமணத்தில் பங்கேற்றவர்களையும் அவரவர் வீட்டில் தனிமையில் இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

ஆனாலும் திட்டமிட்டபடி நேற்று காலை முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் எளிமையான முறையில் அவருக்கு திருமணம் நடந்தது. சில மணி நேரத்தில் மணப்பெண் மாப்பிள்ளையை சுகாதார அதிகாரிகள் அவரவர் வீட்டில் தனிமைப்படுத்தினர். திருமணத்தில் பங்கேற்றவர்களையும் தனிமைப்படுத்தி அவரவர் வீடுகளில் ‘நோட்டீஸ்’ ஒட்டினர். திருமணம் நடந்த வீடு தெரு கிராம பகுதியில் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டனர்.  சுகாதாரத் துறையினர் கூறுகையில் ‘புதுமண தம்பதி திருமணத்தில் பங்கேற்ற குடும்பத்தினர் உறவினர் உட்பட 12 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்’ என்றனர்.

LEAVE A REPLY