குளிர்பானங்களை உட்கொண்டால் என்ன ஏற்படும்….

184

கோடைக்காலத்தில் நீர்ச்சத்து அதிக அளவில் தேவைப்படும். காய்கறிகளில் அதிக நீர்ச்சத்து காணப்படுகிறது. காய்கறிகளை முடிந்தவரை பச்சையாகவோ அல்லது லேசாக வேக வைத்தோ உட்கொண்டால்தான் அதிகளவிலான நீர்ச்சத்தை நாம் பெறமுடியும்.

காய்கறிகளைப் போன்று பழங்களிலும் நிறைய நீர்ச்சத்து உள்ளது. காய்கறிகளையும், பழங்களையும் இந்த கோடையில் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக உட்கொள்கிறோமோ அந்த அளவுக்கு நல்லது. கோடைவெயிலில் சிறிது தூரம் நடந்தாலே வியர்த்துக் கொட்டிவிடும்.

வெங்காயத்தை உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் வெப்பத்தால் ஏற்படக்கூடிய அரிப்பு வராது. வெங்காயத்தில் உள்ள “குவர்சடின்” என்று வேதிப் பொருள் அதற்கு உதவுகிறது. இப்போது தர்பூசணி பழங்கள் நிறைய கிடைக்கும். அந்த பழத்தில் இருப்பது 90 சதவீதம் தண்ணீ­ர் தான். தர்பூசணி போன்று வெள்ளரிக்காயிலும் நிறைய நீர்ச்சத்து உள்ளது.

அதனால் இவற்றை அதிக அளவில் சாப்பிடுங்கள். காய்கறிகளைக் கொண்டு சூப் தயார் செய்து அதை குளிரவைத்து உட்கொள்வதும் சிறந்தது என்கிறார்கள். வாழைப்பழம் நிறைய சாப்பிடுவதும் கோடை காலத்தில் நல்ல உடல்நலத்தை தக்கவைக்கும். வெயிலின் தாக்கம் தாங்காமல் நாம் குளிராக எது கிடைத்தாலும் குடிப்போம், சாப்பிடுவோம்.

நம்முடைய பலவீனத்தைத் தெரிந்து கொண்டுதான் கலர், கலரான குளிர்பானங்களை எல்லாக் கடைகளிலும் விற்கிறார்கள். தாகம் அடங்க வேண்டும் என்பதற்காக அவற்றை அதிக விலை கொடுத்து வாங்கி உபயோகிக்கிறோம். இந்த குளிர் பானங்களால் உடலில் தேவையற்ற கலோரிதான் சேருமே தவிர வேறு எந்தவித பலன்களும் கிடையாது என்கிறார்கள் மருத்துவர்கள்.  

LEAVE A REPLY