ஐ.டி அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த செந்தில்பாலாஜியின் தாயார்..

556
Spread the love

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வெங்கமேடு அண்ணாசிலை பகுதியில் திறந்த ஜீப்பில் பிரச்சாரம் மேற்கொண்டார்.. அப்போது அவர் பேசியதாவது… நான் என்ன தவறு செய்தேன் என்பதற்காக வருமானவரித்துறை சோதனை என தெரியவில்லை.. என் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள் நான் நேரில் வரவேண்டும் என கூறினார்கள்.

நான் பிரச்சாரத்தில் இருப்பதால் எது கிடைத்தாலும் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என கூறி விட்டேன்.. கடைசியில் வீட்டில் இருந்து 8 ஆயிரம் பணத்தை எடுத்து விளக்கம் கேட்டுள்ளனர். இது பால்காரர் கொடுத்த பணம் என எனது தாயார் விளக்கம் கூறியிருக்கிறார்.. அதே போல் எனது தம்பியின் வீட்டில் 85 ஆயிரம் பணம் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். ரெய்டு நடந்த அன்று இரவு தலைவர் என்னை தொடர்பு கொண்டு விபரம் கேட்டார்..

8 ஆயிரம் பணம் இருந்தை கண்டுபிடித்தார்கள் என கூறினேன். தலைவர் பேசியது மிகவும் ஆறுதலாக இருந்தது. என் மீது கோபம் இருக்கலாம் என்னுடன் இருக்கிறார்கள் என்பதற்காக உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் ஐடி சோதனை தான் வேதனை அளிக்கிறது.. இறுதி நாள் பிரச்சாரத்திற்கு பல இடங்களில் திமுகவினருக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. கரூர் போலீசார் பாரபட்சமாக செயல்படுகிறது..எனினும் நமது இலக்கு என்பதனை கருத்தில் கொண்டு பொறுமையாக இருக்க அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்றார் செந்தில்பாலாஜி… 

LEAVE A REPLY