தபாலில் ஐயப்பன் பிரசாதம்.. தேவசம்போர்டு ஏற்பாடு..

47
Spread the love

கொரோனா பரவலால், சபரிமலை மண்டல பூஜை, மகரவிளக்கு சீசனில் கொரோனா பரிசோதனைக்கு பின், தினமும், 1,000 பேர், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், 2,000 பேர் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள், அய்யப்பனை தரிசிக்க முடியாமல் ஏமாற்றம் அடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு பிரசாதத்தை தபாலில் பெற்றுக் கொள்ளலாம் என, தேவசம் போர்டு அறிவித்துள்ளது. இதன்படி, அருகேயுள்ள தபால் நிலையத்தில் பணம் டிபாசிட் செய்து, முகவரி பதிந்தால், அடுத்த சில நாட்களில், பிரசாதம் பார்சலாக வீட்டிற்கு வரும். இதில், அரவணை, அப்பம், நெய், குங்குமம், விபூதி, மஞ்சள் இருக்கும். ‘கட்டணம் தொடர்பாக, இன்னும் ஒருசில நாட்களில் அறிவிப்பு வெளியாகும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY