ஜெ.திரைப்படம், டிவி தொடருக்கு தடையில்லை

260

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் தமிழிலும், ஜெயா என்ற பெயரில் இந்தியிலும் திரைப்படமாக ஏஎல் விஜய் எடுத்து வருகிறார். அதேபோல கவுதம்வாசுதேவ் மேனன் ஜெ.வாழ்க்கை வரலாற்றை  டிவி தொடராக படமாக்கி வருகிறார். இதற்கு தன்னிடம் அனுமதி பெற வேண்டும்.படத்தை முன்னதாக எனக்கு காட்ட வேண்டும் என்று ஜெ.தீபா ஐகோர்ட்டில் வழக்கு தொடந்தார்.

இந்த வழக்கில் ஏ.எல் விஜய் மற்றும் கவுதம் வாசுதேவ் தரப்பில், தீபா சட்டப்பூர்வ வாரிசு இல்லை. ஜெ.வுடன் அவர் நீண்டகாலம் வாழவில்லை. இது ஏற்கனவே வெளியான புத்தகத்தின் அடிப்படையில் எடுக்கப்படுகிறது. கோடிக்கணக்கில் செலவு செய்த பின் தீபா வழக்கு போடுகிறார். திரைப்படம் வெளியாகும் அன்று தீபா ரூ.200 டிக்கெட் எடுத்து படத்தை பார்க்கலாம். என்று வாதிடப்பட்டது.

இந்நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் டிவி, தொடரையும், திரைப்படத்தையும் வெளியிட தடையில்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர். திரைப்படத்தில் ஜெ.வாக கங்கனா ராவத்தும், டிவி தொடரில் ஜெ.வாக ரம்யா கிருஷ்ணனும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் தன்னைப்பற்றி ஏ.எல்.விஜய் தரம் குறைந்து விமர்சனம் செய்துள்ளதாகவும், அதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று  தீபா  தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY