தர்மயுத்தம் நடத்தியது ஓபிஎஸ் தான்…திருப்பி அடிக்கும் ஜெயக்குமார்..

440
Spread the love

மதுரையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அளித்த பேட்டியில்..  அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஏற்றுக்கொள்வது மக்களின் விருப்பம். சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்று பேசியிருந்தார்.

இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது.. ‘’சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தத்தை துவங்கியவர் ஓபிஎஸ். சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என ஓபிஎஸ் கூறியிருந்தார். அதிமுகவை பொருத்தவரை பொதுக்குழு நீக்கப்பட்டாயிற்று. சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்களுடன் எந்தவித தொடர்பும் இருக்கக்கூடாது என தலைமை ஒருங்கிணைப்பாளர் உட்பட மாவட்ட செயலாளர்கள், தலைமை நிர்வாக அதிகாரிகள் அனைவருமே கையெழுத்திட்டிருக்கிறோம். சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்றார் ஜெயக்குமார்.. 

LEAVE A REPLY