ஜெயலலிதா இல்ல வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு….

40
Spread the love

வேதா நிலையத்தின் நிலம் கையகப்படுத்தியது, இழப்பீடு நிர்ணயித்ததற்கு எதிரான வழக்கில் விசாரணை முடிவு பெற்றது. ஜெ.தீபா, ஜெ.தீபக் மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து. ஜெயலலிதா வாரிசான தன்னிடம் ஆலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்று மனுதாரர் ஜெ.தீபக் தெரிவித்துள்ளார். ஒப்புதலே அளிக்காத போது ரூ.67.90 கோடி இழப்பீடு நிர்ணயித்தது சட்டவிரோதம் என ஜெ.தீபா தனது வாதத்தை முன்வைத்தார். அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்ட பிறகே நிலம் கையகப்படுத்தப்பட்டது என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. பல்வேறு பிரச்சனைகளை ஜெயலலிதா எதிர்கொண்டபோது, தீபா, தீபக் ஆகியோர் உறுதுணையாக இல்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY