mirsa
Spread the love
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, கடந்த 2010ஆம் ஆண்டு பாகிஸ்தானின் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவரது அவரது தங்கை அனம் மிர்சாவும், அக்கா வழியில் காதல் திருமணம் செய்யவிருக்கிறார்.
 
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன். இவரது மகன் ஆசாத். இவரைதான் அனம் மிர்சா காதலித்து வருவதாகவும், இவர்களின் காதலுக்கு இருவர் வீட்டிலும் பச்சைக்கொடி காட்டிவிட்டதால் விரைவில் திருமண அறிவிப்பு வெளிவரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 

அனம் மிர்சாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது ஆசாத்துடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் வெளிவருவது இதை உறுதி செய்கிறது. அதுமட்டுமின்றி சமீபத்தில் இருவரும் துபாயில் உள்ள மால் ஒன்றில் திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்கியதாகவும் கூறப்படுகிறது. அனம் மிர்சா பேஷன் டிசைனராகவும், ஆசாத் வக்கீலாகவும் இருக்கின்றனர்.

LEAVE A REPLY