3 ஆயிரம் மலைவாழ் மக்களுக்கு K.N. நேரு உதவி….

586
Spread the love

திருச்சி மாவட்டம், துறையூர் ஒன்றியம் மனலோடை பகுதியில் வசித்து வரும் மலைவாழ் மக்கள் ஊரடங்கினால் வருமானம் இன்றி தவித்து வந்தது தொிய வந்தது. இதனை தொடா்ந்து அங்கு வசித்து வரும் 3 ஆயிரம் குடும்பங்களுக்கு அாிசி, மளிகை பொருட்கள், காய்கறி, முட்டை அடங்கிய உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த உணவு தொகுப்பினை திமுக முதன்மை செயலாளா் கே.என்.நேரு வழங்கினாா். இதற்கு ஏற்பாடு செய்திருந்த திருச்சி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் செளந்திரபாண்டியன், ஸ்டாலின் குமார், மாவட்ட செயலாளா்கள் காடுவெட்டி தியாகராஜன், வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், துறையூர் நகர செயலாளர் முரளி, ஒன்றிய செயலாளர்கள் முத்து செல்வம், அண்ணாத்துரை உள்ளிட்ட பலா் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

LEAVE A REPLY