கடும் கோபத்தில் ரஜினி..!

12214
Spread the love

வருமானவரி துறை விவகாரத்தில் கை கொடுப்பதாக நினைத்து, தமது நம்பிக்கையையும், பெயரையும் பாஜக கெடுத்து விட்டதாக கொதிப்பில் இருக்கிறாராம் ரஜினிகாந்த். அவரது கோபம் இன்னமும் அடங்கவில்லையாம்….!

உலகளவில் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அண்மையில் ரஜினிகாந்த் நடித்தார். இந்த தொலைக்காட்சி ஷோ பற்றி ஏராளமான தகவல்கள் பரவின.

கர்நாடகாவின் பந்திப்புர் காட்டில் சாகசப் பயணம் மேற்கொண்ட போது ரஜினிக்கு காயம் என்றும் தகவல்கள் வெளியாகின. கடைசியில் சென்னை திரும்பிய ரஜினிகாந்த் முள் குத்திவிட்டதாக கூற அனைத்து பரபரப்பும் அப்படியே அடங்கி போனது. இந்த தொலைக்காட்சிக்கு ரஜினிகாந்தை பரிந்துரைத்ததே பிரதமர் மோடி தான் தகவல்கள் கசிந்து இருக்கின்றன. இதுபுறம் இருக்க.வருமானவரி விவகாரத்தில் சிக்கி தமது பெயர் நாறி போக பாஜக காரணம் என்பதால் கொதிப்பில் இருக்கிறாராம் சூப்பர் ஸ்டார்.

ஏற்கனவே பாஜக சார்பு என்ற கலர் தம் மீது பூசப்பட்டு வரும் நிலையில் வருமான வரி விவகாரத்தால் ரஜினி கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.  இதுவரை தம்மை பற்றி நன்மதிப்பாக வைத்திருந்த ரசிகர்கள் என்ன நினைப்பார்கள் என்றும் வேதனை வெளியிட்டுள்ளாராம். 2002-2003, 2003- 04ம் ஆண்டுக்கான வருமான வரி தொடர்பாக ரஜினிக்கு ஏற்கனவே அபராதம் விதிக்கப்பட்டிருந்தது., வருமானம் தொடர்பாக ரஜினிகாந்த் கொடுத்த ஆதாரங்கள், தகவல்களை ஏற்றுக் கொண்டு வழக்கு வாபஸ் பெறப்பட்டது. பாஜகவுக்காக மறைமுக ஆதரவு என்ற அவரின் நடவடிக்கை, பெரியார் விவகாரத்தில் நேரிடையாக வெளிச்சத்துக்கு வந்ததாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். இந்த சூழ்நிலையில் டுவிட்டர் பக்கத்தில் இன்னும் தம்மை போட்டு கழுவி ஊற்றுவதால் பாஜக மீது கடும் அதிருப்தியில் இருக்கிறாராம் ரஜினிகாந்த்.

ஒருநாளில் ஓய்ந்துவிடும் என்று நினைத்த நேரத்தில் அலாவுதீனும் அற்புத விளக்கு போன்று டுவிட்டரில் இன்னும் கலாய்த்து வெளியாகும் மீம்சுகளால் கடும் கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. வட்டி விவகாரம், வட்டி பிசினஸ் என்ற யோசனையை தந்ததே பாஜக தான் என்றும், அதனால் தமது இமேஜை வட்டிக்கடைக்காரம் ரேஞ்சுக்கு குதப்பி வைத்துவிட்டது என்றும் பொருமி வருகிறராம். கடும் கேலி, மக்களிடம் தம்மை பற்றிய நன்மதிப்பை நாறடித்ததால் பாஜக மீதும், அதன் டெல்லி தலைமை மீதும் தாங்கமாட்டாத கோபத்தில் இருக்கிறராம். ரஜினியை எப்படி சாந்தப்படுத்துவது என்று தெரியாமல் பாஜகவும் கையை பிசைந்து கொண்டிருப்பதாக தகவல் என்பது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY