கண்ணீர் விட்ட தியாகராஜன்.. மன்னித்து விட்டதாக வெள்ளாளர் சங்கம் அறிவிப்பு

3275
Spread the love

திருச்சி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் நண்பர் ஒருவரிடம் போனில் பேசும்போது வெள்ளாளர் இனம் தொடர்பாக பேசிய ஆடியோ ஒன்று வலைதளங்களில் வைரலாகி, தமிழகம் முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் வௌ்ளாளர் சமூகத்தை சேர்ந்த பல்வேறு அமைப்புகளின் கூட்டம் திருச்சி கிஆபெ விசுவநாதம் பள்ளியில் இன்று நடைபெற்றது. இதில் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, காடுவெட்டி தியாகராஜன், மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் காடுவெட்டி தியாகராஜன் பேசும்போது….. இந்த ஆடியோ முழுமையாக வௌியிடப்படவில்லை. காவல்துறையில் பணிபுரியும் வௌ்ளாளர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை காப்பாற்றவே அவ்வாறு வேகமான பேசினேன். இதனால் கடந்த 10 நாட்களாக நிம்மதி இழந்துள்ளேன்.

தவறாக பேசியதை மன்னித்து தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என்று பேசும் போது அவர் கண்ணீர் விட்டழுதார். அவரை கூட்டத்தில் வந்தவர்கள் தேற்றினர். அதன் பின்னர் அவர் தொடர்ந்து பேசும் போது…..இன்னும் 3 அல்லது 4 நாட்களுக்குள் எனது மாவட்ட செயலாளர் பதவி காலி என்று பேசிக்கொள்கிறார்கள். இந்த பதவி முதன்மை செயலாளர் கே.என்.நேரு போட்ட பிச்சை. இந்த பதவி இல்லை என்றாலும் அவருக்கு ஆதரவாக இருப்பேன் என்று அவர் பேசினார். பின்னர் செய்தியாளர்களை காடுவெட்டி தியாகராஜன் சந்தித்த போது…. நான் பேசியது பலர் மனது புண்பட்டு இருக்கும். இதற்கு இத்தோடு முற்றுபுள்ளி வைக்கப்பட்டு உள்ளது. என்பெயரை பயன்படுத்துபவர்களை கண்டிப்பதோடு, வருத்தம் தொிவித்து கொள்கிறேன். இதனை யார் செய்தார்கள் என்று தொியும். இது குறித்து வழக்கு தொடுப்பேன் என்றார். தொடர்ந்து சோழிய வௌ்ளாளர் சங்க மாநில துணை தலைவர் டாக்டர் செந்தில்குமார் பேசும்போது……. இந்த பிரச்சினைக்கு இத்தோடு முற்றுபுள்ளி வைப்போம். இதனை அரசியல் ஆக்க வேண்டாம். இது குறித்து வழக்கு பதியப்பட்டு உள்ளது. எனவே இதற்கு அடுத்து இந்த பிரச்சினைக்கு காவல்துறையே பொறுப்பு. வௌ்ளாளர் சமுதாயமும், முத்தரையர் சமுதாயமும் இணைந்து தமிழக முன்னேற்றத்திற்கு பாடுபடுவோம் என்று அவர் கூறினார். பேட்டியின் போது உடன் வௌ்ளாளர் முன்னேற்ற கழக மாநில பொதுச்செயலாளர் ஹரிஹரன் உடனிருந்தார்.

LEAVE A REPLY