Skip to content
Home » நடிகை காஜல் அகர்வால் படத்திற்கு தடை.. கோர்ட் அதிரடி உத்தரவு…

நடிகை காஜல் அகர்வால் படத்திற்கு தடை.. கோர்ட் அதிரடி உத்தரவு…

ஹாரர் த்ரில்லர் கதைக்களத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கருங்காப்பியம்’.   ‘யாமிருக்க பயமேன்’, ‘கவலை வேண்டாம்’, ‘காட்டேரி’ போன்ற படங்களை’ இயக்கிய டிகே இந்த படத்தை இயக்கியுள்ளார். வெற்றிவேல் டாக்கீஸ் தயாரிக்கும் இப்படம் ஹாரர் காமெடி படமாக உருவாகியுள்ளது.

karungaapiyam

இந்த படத்தில் காஜல் அகர்வால், ரெஜினா, ரைசா வில்சன், ஜனனி உள்ளிட்ட நான்கு கதாநாயகிகள் நடித்துள்ளனர். நடிகர் நடிகர் கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் ஆதவ் கண்ணதாசன், யோகிபாபு, அதிதி ரவீந்திரநாத், ஷெர்லின் சேத், நோய்ரிகா, லொல்லு சபா மனோகர், ‘குக் வித் கோமாளி’ புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்

karungaapiyam

வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த படத்தை வெளியிட நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. இது குறித்து சஞ்ஜீத் சிவா ஸ்டுடியோ நிறுவனம் விடுத்துள்ள அறிவிக்கையில், ‘கருங்காப்பியம்’ படத்தை தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் திரையரங்குகளில் திரையிடும் முழு விநியோக உரிமையை ஐ கிரியேஷன் நிறுவனத்திடமிருந்து சஞ்ஜீத் சிவா ஸ்டுடியோ பெற்றிருந்தது. இதற்கு தயாரிப்பு நிர்வாகமாகிய பாவே எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் ஒப்புதல் அளித்திருந்த நிலையில் சமீபகாலமாக ஐ கிரியேஷன் நிறுவனமே நேரடியாக திரைப்படத்தை வெளியிடவுள்ளதாக வதந்தியை கிளப்பி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!