24 ஆயிரம் லஞ்சம்… விஜிலன்சில் சிக்கிய பெண் சர்வேயர்…

308
Spread the love

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், நைனார்பாளையம் வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவர் தனது நிலத்தை அளப்பதற்காக கிராம உதவியாளரான சுசீலாவை அணுகியுள்ளார். அவரும் சர்வேயர் சூர்யாவும் நிலத்தை அளப்பதற்காக ரூ.24 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என கூறியதால் லஞ்சம் தர விரும்பாத ஜெயராமன் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு ஏடிஎஸ்பி தேவநாதன் இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் நிலம் அளவீடு செய்த இடத்திற்கு சென்று ஜெயராமனிடம் சர்வேயர் சூர்யா மற்றும் கிராம உதவியாளர் சுசீலா ஆகியோர் லஞ்சப் பணம் பெற்றபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவர்களை சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய பின்னர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

LEAVE A REPLY