முதல் ஆளாக உள்ளாட்சி பிரச்சாரத்தை துவக்கும் கமல்…

50
Spread the love

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இதில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தேமுதிக, பாமக, நாம் தமிழர், மநீம, அமமுக என எழுமுனை போட்டி எழுந்துள்ளது. 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் யாருடனும் கூட்டணி இன்றி தனித்து போட்டியிடுகிறது. இதனை முன்னிட்டு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் முதல் ஆளாக தனது பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்.  “உள்ளாட்சி – உரிமைக்குரல்” எனும் பேரில் நாளை அவர் காஞ்சிபுரம் கோவூரிலிருந்து தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து நாளை மறுதினம் செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தைத் தொடர்கிறார். ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு கட்சிகளின் முதல் கட்ட தலைவர்கள் பிரச்சாரம் செய்வது அரிது.. அந்த வகையில் முதல் ஆளாக கமல் பிரச்சாரத்தை துவக்குகிறார்… 

LEAVE A REPLY