தமிழக போலீசுக்கு லீவு.. கமல் பாராட்டு..

101
Spread the love

தமிழக காவல்துறையினருக்கு வார விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதை வரவேற்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பாராட்டி உள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்…… காவல்துறையினருக்கு மட்டும் திட்டவட்டமான பணி நேரமோ ஓய்வு ஒழிச்சலோ கிடையாது. இதை மாற்ற வேண்டுமென்று பேச்சு எழுந்திருக்கிறது. கடமையைச் செய்பவர்களுக்கு ஓய்வு கொள்ளவும், உழைப்பைக் கொடுப்பவர்களுக்கு இளைப்பாறவும் உரிமை உண்டு. சுழற்சி முறையிலோ வேறு விதத்திலோ பிற அரசு ஊழியர்கள் போல் காவல் துறையினருக்கும் ஓய்வு கொடுக்க முன் வந்துள்ளது பாராட்டுக்குரியது. வெறும் பேச்சாய் இல்லாமல் இது நடைமுறைப் படுத்தப்படவும் வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY