அதிபர் போட்டியிலிருந்து விலகினார் கமலாஹாரிஸ்

178
Spread the love

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில்  முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், அமெரிக்க – ஆப்ரிக்க – இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் கமலா ஹாரிஸ், இந்திய – அமெரிக்க வம்சாவளி பெண் துளசி கப்பார்ட் ஆகியோர் முயன்று வந்தனர். இதில் கமலாஹாரிஸ்க்கு முதலில் ஆதரவு அதிகமாக இருந்தது. இதனால் அவர்தான் போட்டியிடுவார் என்று தகவல் வெளியானது. ஆனால் தற்போது அவருக்கான ஆதரவு குறைந்து ஜோ பிடனுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. மேலும்   தேர்தலில் செலவு செய்ய வேட்பாளரால் எவ்வளவு பணம் செலவு செய்ய முடிகிறது. எவ்வளவு நிதி திரட்ட முடிகிறது என்பதும் இதில் முக்கிய இடம் பெறும்.

இந் நிலையில் அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து கமலா ஹாரிஸ் விலகி இருக்கிறார். பிரச்சாரம் செய்ய போதிய பணம் இல்லை என்று கூறி அவர் பதவி விலகி உள்ளார். அதில், நான் அனைத்து விதமாகவும் யோசித்து பார்த்தேன். கடந்த சில நாட்களாக எனக்கு தேர்தலில் செலவு செய்ய பணம் இல்லை. போதுமான பணம் இல்லாமல் நிறைய பிரச்சனை வந்தது. நான் கோடீஸ்வரி கிடையாது. என்னால் அதிகம் செலவு செய்ய முடியாது என்று தெரிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY