கமல்நாத் பேச்சு… கூட்டணி கட்சிகள் அப்செட்

266
Spread the love

மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள கமல்நாத் வேலைவாய்ப்பு தொடர்பாக தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகார், உத்தர பிரதேசம் மாநிலங்களிலிருந்து அதிக அளவு தொழிலாளர்கள் வேலை தேடி மத்திய பிரதேசம் வருவதால், உள்ளூர் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதாக கூறியுள்ளார். அவருடைய இப்பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 அதிகமான தொழிற்சாலைகள் உத்தரபிரதேசம், பீகார் போன்ற பிற மாநிலங்களில் இருந்து வேலைக்கு ஆள் எடுக்கிறது. அவர்களை நான் விமர்சனம் செய்யவில்லை. மத்திய பிரதேச மாநில இளைஞர்கள் வேலையின்றி உள்ளார்கள் என கூறியுள்ளார். இது மிகவும் துரதிஷ்டவசமானது என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். இது தொடர்பாக சமாஜ்வாடி தலைவரும், உ.பி. முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் பேசுகையில், இது மிகவும் தவறானது. மராட்டியம், டெல்லியை அடுத்து மத்திய பிரதேசத்தில் இதுபோன்ற குரல் எழுந்துள்ளது.  வடஇந்தியர்கள் வெளியேறுவதாக முடிவு செய்து விட்டால் யார்தான் அங்கு வருவார்கள்? என்று கேள்வியை எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ராகுலிடம் கேட்கையில், கமல்நாத் கருத்தை பார்க்கவும் இல்லை, கேட்கவும் இல்லையென்று தெரிவித்துள்ளார். கமல்நாத் பேச்சுக்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க சமாஜ்வாடியும் காங்கிரசுக்கு ஆதரவளித்துள்ளது.

LEAVE A REPLY