இன்று கவியரசு கண்ணதாசன் நினைவு நாள்

223
Spread the love

கவிஞர் கண்ணதாசன் 1927-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ம் தேதி பிறந்தார். தந்தை சாத்தப்பனார், தாய் விசாலாட்சி ஆச்சி. கண்ணதாசனுக்கு பொன்னம்மா, பார்வதி, வள்ளியம்மை என்று 3 மனைவிகள். மூவருக்கும் சேர்த்து மொத்தம் 14 குழந்தைகள். உடல்நலம் பாதிக்கப்பட்டு 1981-ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி சிகாகோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அக்டோபர்-17 ஆம் தேதி  இறந்தார். கண்ணதாசன் நாத்திகராக வாழ்க்கையை தொடங்கியவர். பின்னாளில்  ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ படைத்தார். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். ‘இந்திய ஜனாதிபதியைப் போல் சம்பளம் பெறுகிறேன். ஆனால், இந்தியாவைப்போல் கடன்பட்டு இருக்கிறேன்’ என்று குறிப்பிடுவார். ‘ஒரு மனிதன் எப்படி வாழக் கூடாது என்பதற்கு என்னை விடச் சிறந்த உதாரணம் இருக்காது என்றார். சுய தரிசனம் கிடைத்து விட்டவனுக்கு தெய்வ தரிசனம் தேவையில்லை’ என்ற கவிஞரின் நினைவு நாள் இன்று. 

LEAVE A REPLY