58க்கும் 65க்கும் டும்…டும்…டும்… இது கேரள ”லவ் ஸ்டோரி”..

288
Spread the love

திருச்சியை சேர்ந்தவர் ராஜன் என்பவர் சபரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் சமையல் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மனதுக்கு பிடித்த பெண் கிடைக்காததால் 58 வயதானாலும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு பேட்ஜ்லராக இருந்து வந்துள்ளார்.  கொரோனா காலத்தில் வாழ்வாரத்தை இழந்ததால், கேரள மாநிலம் அடூர் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி முதியோர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கதான் இவரோட கதையில டூவிஸ்ட் ஏற்பட்டது. இவரை போலவே மண்ணடி பகுதியை சேர்ந்த சரஸ்வதி என்ற வாய்பேச இயலாத 65 வயதான பெண் ஒருவரும் இந்த காப்பகத்தில் இருந்துள்ளார். அவரை பார்த்ததும் மனதுக்குள் பட்டாம் பூச்சி பறந்துள்ளது. ஒரு கட்டத்தில் தனது காதலை அவர் சரஸ்வதியிடம் தொிவிக்க, இந்த வயசுலயா…? என்று அதிர்ச்சியுடன் கேட்டாலும், ராஜன் காதலில் அவர் சொக்கி போய் விட்டார். ஓஹோ எந்தன் பேபி, நீ வாராய் எந்தன் பேபி….. என்று காதலர்கள் மகிழ்ச்சியில் சுற்றி வருவதை கண்ட காப்பக நிர்வாகிகள், இருவருக்கும் கல்யாண ஏற்பாட்டினை செய்தனர். காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி அலங்கரிக்கப்பட்ட மணப்பெண் சரஸ்வரியின், கழுத்தில் ராஜன் தாலி கட்டி தனது முரட்டு சிங்கிள் வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி வைத்தார். பொதுவாக மணம் முடித்த தம்பதிகள் மற்றவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது வழக்கம். ஆனால் இந்த திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் மணமக்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர். காதலுக்கு முன்னால சாதி மதம் எல்லாம் தோற்று போகும் என்பார்கள். இங்கே வயதும் தோத்து போச்சு….

LEAVE A REPLY