ருசியான காரப்பூந்தி தயிர் பச்சடி ரெசிபி…

17
Spread the love

தேவையான பொருள்கள்:- காரப்பூந்தி – 100 கிராம் தயிர் – 1 கப் பச்சை மிளகாய் – 2 சாம்பார் வெங்காயம் – 10 எண்ணெய் -தேவையான அளவு கடுகு -தேவையான அளவு உப்பு -தேவையான அளவு கறிவேப்பிலை – தேவையான அளவு சாம்பார் பொடி – 1 ஸ்பூன்.

செய்முறை:– அடுப்பை பத்தவைத்த பிறகு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடான பிறகு அதில் கடுகு. பச்சை மிளகாய், வெங்காயம், தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பச்சை வாசனை நீங்கியதும் அதில் ஒரு ஸ்பூன் சாம்பார் பொடி சேர்த்து 3 நிமிடம் கிளறவும். ஒரு பக்கம் பாத்திரத்தில் தயிர் எடுத்து கொள்ளவும்.தயிரில் வதக்கிய கலவையை சேர்த்து கொண்டு தயிரோடு கிளறவும். இந்த உணவை பரிமாறும் பொது காரப்பூந்தியை சேர்த்து கொண்டால் காரப்பூந்தி தயிர் பச்சடி ரெடி.. இதனை சைட் டிஷ் ஆக ஒரு தட்டில் வைத்து கூட சாப்பிடலாம்..  

LEAVE A REPLY