10ம் வகுப்பு தேர்வு எழுதிய 32 பேருக்கு கொரோனா. கர்நாடகாவில் அதிர்ச்சி

91
Spread the love
கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கிய நிலையில் அங்கு 10ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்பட்டன. கொரோனா அச்சம் காரணமாக தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாக செய்திகள் வெளியாகி இருந்தது. தற்போது அங்குத் தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. ஏற்கனவே 18 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. நேற்று மட்டும் 14 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்வு எழுத வந்ததன் மூலம் 32 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரவியுள்ள விவகாரம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

LEAVE A REPLY