கார்த்திகை பண்டிகை டிப்ஸ்

164
Spread the love

கார்த்திகை பண்டிகை வரும் 10ம் தேதி கொண்டாடப்படுகிறது.. சில டிப்ஸ்.. 

கண்டிப்பாக  27 விளக்குகள் ஏரிய வேண்டும். அதில் மண் அகல் கட்டாயம் வேண்டும்.

பித்தளை விளக்குகளை தேய்த்துவிட்டு விபூதி கொண்டு துடைத்தால் தங்கம் போல மின்னும்.

சிறிய விளக்குகளை தாம்பாளங்களில் வைத்து எண்ணைய் ஊற்றி, திரியை ஏற்றி எடுத்து செல்லலாம். 

குத்து விளக்கு கட்டாயமாக ஏற்ற வேண்டும். வாய்ப்பு இருந்தால் குத்துவிளக்கில் நெய் ஊற்றி ஏற்றினால் நல்லது.

கார்த்திகை முடிந்ததும் விளக்குகளை எண்ணெய்ப் போக ஒரு துணியால் துடைத்து சோப்பு நீரில் மூழ்க வைத்து பிறகு கழுவி வைக்கலாம்.

கார்த்திகை பொரியில் தேங்காயை சிறிது சிறிதாக வெட்டி வெல்லப் பாகில் சேர்ப்பது போல் முந்திரியையும் சிறியதாக உடைத்து சேர்த்துக்கொண்டால் சுவையாக இருக்கும்.

 

LEAVE A REPLY