etamilnews.com தொடர் முயற்சி… கருமண்டபம் ஆக்கிரமிப்பு அகற்றம்..

204
Spread the love

திருச்சி கருமண்டபம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள வாய்க்கால் தற்போது மழைநீர் வடிகாலாக பயன்பட்டு வருகிறது.  

நடவடிக்கைக்கு முன்பு…

 

 

 

 

 25 அடி வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மிகவும் குறுகி சுமார் 10 வாய்க்காலாக மாறி விட்டது. இதனால் மழைக்காலங்களில் நீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்து பெரும் சிரமப்படுவதாக அப்பகுதிமக்கள் மாநகராட்சியிடம் மனு ஒன்றை அளித்தனர். இந்த மனு குறித்து மாதகணக்கில் மாநராட்சி கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருப்பது குறித்து  

etamilnews.comல்

  1. செப் 2 ம் தேதி மழை பெய்தாலேயே “திக் திக்.. கருமண்டபத்தில் ஆக்கிரமிப்பு  அகற்றப்படுமா?”
  2. செப் 22ம் தேதி “கருமண்டபம் ஆக்கிரமிப்பு என்ன ஆச்சு? திருச்சி மாநகராட்சி அலட்சியம்”…
  3. அக்டோபர் 2ம் தேதி “ஆக்கிரமிப்பை அகற்றாமல் அலட்சியப்படுத்தும் திருச்சி மாநகராட்சி”..

என தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டு வந்தது. இதன் எதிரொலியாக கடந்த வாரம் திருச்சி மாநகராட்சி செயற்பொறியாளர் சிவபாதம் மற்றும் அதிகாரிகள் கருமண்டபம் வந்து வாய்க்கால் ஆக்கிரமிப்பு குறித்து பார்வையிட்டு அளந்து குறியீடு செய்துவிட்டு சென்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றும்

நடவடிக்கைக்கு பின்பு…

பணியினை புல்டோசர் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர். குறுகிய வாய்க்காலை மீண்டும் 25 அடியாக மாற்றும் பணியினை மேற்கொண்டு வரும் திருச்சி மாநகராட்சி அதிகாரிகளுக்கும் இதற்கு உதவிய etamilnews.com மிற்கு  அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்… 

LEAVE A REPLY