தொடரும் போலீஸ் தொந்தரவு… கருணாஸ் டிரைவர் தற்கொலை முயற்சி

220
Spread the love

நாங்குநேரியில் போலீஸார் தாக்கியதால், மனம் உடைந்த கருணாஸ் எம்.எல்.ஏவின் கார் ஓட்டுநர் உள்பட 3 பேர், மண்ணெண்ணெய் குடித்து தற்கொலைக்கு முயன்றது, பரபரப்பை ஏற்படுத்தியது.

நெல்லை மாவட்டம் மஞ்சங்குளத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவர் நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸின் கார் டிரைவராக இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு கருணாஸ் கைது செய்யப்பட்ட போது, நாங்குநேரி அருகே அரசு பேருந்து கல்வீசி தாக்கப்பட்டது. இது தொடர்பாக கார்த்திக் உள்ளிட்டோரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், சோதனை என்ற பெயரில் இரவு நேரங்களில், போலீசார் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கார்த்திக், சுப்பையா, சாமிதுரை ஆகியோர் காவல்நிலையத்துக்கு சென்று கேட்டுள்ளனர். அங்கு போலீசார் தாக்கியதால் மனமுடைந்த 3 பேரும் தாங்கள் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய் குடித்து, தற்கொலைக்கு முயன்றனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு நாங்குனேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

LEAVE A REPLY