கருப்பர் கூட்டம் அலுவலகத்திற்கு சீல்

264
Spread the love

 கருப்பர் கூட்டம் என்ற, யு டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்த்திற்கு விளக்கம் என்கிற வகையில் வெளியிடப்பட்ட வீடியோ தமிழக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  இதனையடுத்து ‘கருப்பர் கூட்டம்’ யு டியூப் சேனலை நடத்தி வரும், சுரேந்தர் நடராஜன் புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பம் போலீஸ் ஸ்டேசனில் சரணடைந்தார், சேனல் நிர்வாகி செந்தில்வாசன் கைது செய்யப்பட்டார். செந்தில்வாசனிடம் நடத்திய விசாரணையில் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு வீடியோ தயாரிக்கும் ஸ்டுடியோவாகச் செயல்பட்டு வந்த சென்னை தி.நகர், நியூபோக் சாலையில் உள்ள அலுவலகத்தில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு செய்தனர். அதில் ஹார்ட்டிஸ்க், பென் டிரைவ், லேப்டாப் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றினர். மேலும், மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று அலுவலகத்தைப் பூட்டி சீல்  வைத்தனர். 

LEAVE A REPLY