தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை மற்றும் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலை 5. 30 மணி முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட
நிலையில் திடீரென கரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஜவஹர் பஜார், பசுபதிபாளையம் காந்திகிராமம்,சர்ச் கார்னர்,லைட் ஹவுஸ் கார்னர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் மிதமான மழை சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக செய்து வருகிறது. மிதமான மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.