கரூரில் சம்பவத்தன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் இன்று மூன்று பேர் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.
கரூர், வேலுச்சாமி புரத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
கரூரில் சிபிஐ விசாரணை கடந்த மாதம் 17ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக எஸ்ஐடி குழுவிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்களை வைத்து, எஸ்.பி பிரவீன் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் முதல் கட்ட விசாரணையை தொடங்கினர். தொடர்ந்து கடந்த 6 நாட்களுக்கு முன்பாக வேலுச்சாமிபுரம் சம்பவ இடத்தில் 3டி டிஜிட்டல் ஸ்கேனர் உதவியுடன் சம்பவ இடத்தை அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக, கரூர் சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள சிபிஐ அதிகாரிகள் வேலுச்சாமிபுரம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் என இதுவரை 25-க்கும் மேற்பட்ட நபர்களிடம் காட்சியங்கள் பெறுவதற்கான விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், நேற்று கரூர் சிபிஐ அலுவலகத்தில் சம்பவம் நடந்தபோது, வேலுச்சாமிபுரம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 19 காவலர்கள் நேற்று விசாரணைக்காக ஆஜராகினர்.
இதில் நேற்று 17 காவலரிடம் விசாரணை நடத்திய நிலையில் மூன்று காவலர்களிடம் விசாரணை நடைபெறாமல் இருந்த நிலையில் அவர்கள் இன்று மீண்டும் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர்.

