திமுகவுக்கு எப்போ..?…எப்போதும் அதிமுக தான்.. கரூர் ‘லக லக’

347

கரூர் மாவட்டம் ஈசநத்தம், நெடுங்கூர், உப்பிடமங்கலம் உள்ளிட்ட இடங்களில் குளம் தூர்வாரும் பணிகளை தொடங்கி வைப்பதற்காக இன்று சென்றிருந்தார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் மூன்று குளங்களில் திமுக இளைஞரணியினர் இன்று தூர் வாரும் பணிகளை தொடங்க இருந்த நிலையில், திடீரென இரவோடு இரவாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  தூர்வாரும் பணிகளை ஏற்பாடு செய்ததாக சொல்லப்படுகிறது. நாங்க செய்ய இருந்த வேலைகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்திருப்பது வரவேற்கத்தக்கது. , 14ஆம் தேதி முதல் திமுக இளைஞரணியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. அப்போது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சீக்கிரமாக வந்து திமுக இளைஞரணியில்   இணைந்து கொள்ளலாம் என அன்பில் மகேஷ் பொய்யா மொழி கூறினார். இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேட்டதற்கு நான் எப்போதும் அதிமுகவில் தான் இருப்பேன் என்றார். 

LEAVE A REPLY